சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-21361

  மழைபெய்யியர் எழுந்தது,
‘பசலை உணீஇயர் வேண்டும்’

குறுந்.27
   எனவும்,
 
  மழைபெய்யியர் பலி கொடுத்தார்,
‘கொற்கைச் செழியர் கொங்கர்ப் பணியியர்
வெண்கோட்டு யானை பேஎர்க் கிழவோன்
பழையன் வேல்வாய்த் தன்ன’-
 



நற்.10

எனவும் ஏனை ஐந்தும் வினைமுதல் வினையும் பிறவினையும் கொண்டு
முடிந்தவாறு காண்க.

இனி மழைபெய்தற்கு முழங்கும்- மழைபெய்தற்குக் கடவுள் வாழ்த்துதும்- எனவும்,
இறந்தபின் இளமை வாராது- கணவன் இனிது உண்டபின் காதலி முகம் மலர்ந்தது-
எனவும், கடுத்தின்னாமுன் துவர்த்தது- மருந்து தின்னாமுன் நோய் தீர்ந்தது- எனவும்,
உரைத்தக்கால் உரை பல்கும்-;
 

  ‘வலனாக வினையென்று வணங்கிநாம் விடுத்தக்கால்,
ஒளியிழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை’

கலி-35
 
எனவும், நல்வினைதான் உற்றக்கடை உதவும்- நல்வினை தான் உற்றக்கடைத் தீவினை
வாரா- எனவும்; நல்வினை தான் உற்றவழி உதவும்- நல்வினைதான் உற்றவழித் தீவினை
வாரா- எனவும், நல்வினைதான் உற்ற இடத்து உதவும்- நல்வினைதான் உற்ற இடத்துத்
தீவினை வாரா- எனவும், இன்ன என்பதனால் தழீஇயவையும் வினைமுதல் வினையும்
பிறவினையும் கொண்டு முடிதல் ஒன்றென முடித்தலால் கொள்க-