சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

362 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

உண்டு வந்தான்- உண்டானும் வந்தானும் ஒருவனே வந்து தோன்றினான்
என்பதும் அது.

‘எண்ணித் துணிக கருமம்’- எண்ணுபவனும் துணிபவனும் ஒருவனேயாவான்.

‘பரீஇ உயிர்செகுக்கும் பாம்பு’- பரித்தலும் உயிர் செகுத்தலும் பாம்பின்
தொழில்கள்.

‘சினைஇ, நிலந்தலைக் கொண்ட ஈரைம்பதின்மர்’ சினக்கப்பட்டவரும் நிலந்தலைக்
கொண்டவரும் நூற்றுவரே.

இவை செய்து என் எச்சம் தன்வினைமுதல் வினையே கொண்டு முடிந்தமைக்கு
எடுத்துக்காட்டு.

உண்ணூ வந்தான்- உண்டானும் வந்தானும் ஒருவனே.

‘நிலம்புடையூ எழுதரும் வலம்படு குஞ்சரம்’

புடைத்ததும் எழுந்ததும் யானையே, இவை செய்பு என்எச்சம் தன்
வினைமுதல்வினை கொண்டாமைக்கு எடுத்துக்காட்டு.

உண்ணா வந்தான்- உண்டானும் வந்தானும் ஒருவனே;
                    ‘நிலங்கிளையா நாணி நின்றோள்...........கடவுள் அன்னோள்

நிலம் கிளைத்தவளும் நாணி நின்றவளும் அப்பரத்தையே. இவை செய்யா என்
எச்சம் தன்வினைமுதல்வினை கொண்டமைக்கு எடுத்துக்காட்டு.

உண்குபு வந்தான்- உண்டானும் வந்தானும் ஒருவனே,

‘தெரிபு தெரிபு குத்தின ஏறு’
                    தெரிதலும் குத்துதலும் ஏற்றின் தொழிலே. இவை செய்பு என் வாய்பாடு
தன்வினைமுதல்வினை கொண்டமைக்கு எடுத்துக்காட்டு.