இந் நூற்பா உரைச்செய்திகள் ‘முதலில்நான்கும்’ (நன்.343) என்ற நூற்பாவிற்கு மயிலைநாதர் உரைத்த உரையையும், தொல்காப்பியச் சொற்படல 234ஆம் நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் உரைத் உரையையும் கொண்டு வரையப்பட்டன. |
ஒத்த நூற்பாக்கள் |
| ‘அவற்றுள் முதல்நிலை மூன்றும் வினைமுதல் முடிபின’.
‘ஏனை எச்சம் வினைமுத லானும் ஆன்வந்து இயையும் வினைநிலை யானும் தாம் இயல் மருங்கின் முடியும் என்ப.’
முழுதும்
‘செய்து செய்யூ செய்பு வினைமுதல் முடிபின ஆகும் மொழியுங் காலே.’ ‘செய்தெனச் செய்யியர் செய்யிய செயின் செய செயற்குப் பிறவினை முதலொடும் சிவணும்.’ |
தொல்.சொல்.230
தொல்.சொல்.232
நன்.344, தொ.வி.120
மு.வீ.வி.31
33 |
மேலதற்குப் புறனடை |
248 | சினைவினை முதலொடும் பிறவினை பிறவினை முதலொடும் முடிதலும் முன்னினர் கொளலே. | |
இது வினைமுதல்வினைகொண்டு முடியும் என்ற முதல் நான்கற்கும் ஆவதொடு புறனடை கூறுகின்றது; ஏனையவற்றிற்கு இவ்வாறு அமைதிகூற வேண்டாமையின். இ-ள்: சினைப்பொருள் பற்றித் தோன்றிய வினையெச்சம் அச் சினைவினையான்முடிதலே அன்றிமுதல்வினையொடு முடிதலும், சினைவினையே அன்றி முதல் வினையும் தமக்கு உரிய |