வினைமுதல் வினையொடு முடிதலே அன்றிப் பிறவினை முதல் வினையொடு முடிதலும் ஆராய்ந்து அமைத்துக் கொள்ள என்றவாறு.எ-டு கை அற்று வீழ்ந்தான்- கண்நொந்து கிடந்தான் வயிறு நொந்து கிடந்தான்- ‘கண்துயின்று முன்றில் போகா முதிர்வினள் யாயும்’ புறம். 159 ‘தாள்ஒற்றித் தப்பி வீழ்ந்தார் தறிவலை மானின் பட்டார்’ சீவக.2768 எனவும், கைஇறா வீழ்ந்தான்- கண்வலியாக் கிடந்தான்- எனவும், கைஇறுபு வீழ்ந்தான்- வயிறு குத்துபு கிடந்தான்- எனவும் காரண காரியப் பொருளவாயும், ‘அகன் அமர்ந்து செய்யான் உறையும் முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்’ குறள். 84 ‘காமன் கணையொடு கண்சிவந்து புலர்ந்தாள்’ எனச் சிறுபான்மை காரணகாரியப் பொருள் அல்லவாயும், சினைவினை முதல்வினையொடும், ‘ஞாயிறு பட்டு வந்தான், ‘உரல்கால் யானை ஒடித்துஉண்டு எஞ்சியனவும்’ குறுந்.232 எனவும், ஞாயிறு படூஉ வந்தான் எனவும், ஞாயிறு படாஅ வந்தான் எனவும், ஞாயிறு படுபு வந்தான் எனவும், |