சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

368 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

முதல்வினை தமக்கு உரிய வினைமுதல் வினையான் அன்றிப் பிறவினைமுதல்
வினையொடும் முடிந்தவாறு காண்க.

தலைவன் பிரிந்து வருந்தினாள்-

‘மாஅல் யானையொடு மறவர் மயங்கித்
                    தூறு அதர்ப்பட்ட ஆறுமயங்கு அருஞ்சுரம்’   கலி-5

வான்நின்று உலகம் வழங்கி வருதலான்’    குறள்.11
எனவும்,

நமது நலன் நுகர்வான் யாம் விரும்புதும்- கற்பான் நூல்செய்தான்- செல்வம்
தருபாக்கு யாம் விரும்புதும்- எனவும் பிறவினை கொண்டு முடிந்தனவோ எனின், அவை
காரண காரியப் பொருளவாய் இறந்தகாலம் உணர்த்தும் செயஎன் எச்சமும் தன்
பொருட்டாய் எதிர்காலம் உணர்த்தும் செய என் எச்சமும், மேலைச் சூத்திரத்துப் ‘பிற’
என்ற மிகையானே முறையே செய்து என் எச்சமாயும், செய்வான்- செய்வான்-
செய்பாக்கு- என்னும் எச்சங்களாயும் திரிந்து நின்றுழியே, பிறவினை கொண்டன
எனப்படும் என்க.

அற்றேல், ஞாயிறு பட்டு வந்தான்-
                    ‘உரல்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய யா.

என்பன முதலியவற்றையும் செய என் எச்சத்திரிபு என்றால் படும் இழுக்கு
என்னையோஎனின், பிறவினை கொண்டன ஆயினும், செய்து என் எச்சத்திற்கு உரிய
இறந்தகாலம் உணர்த்தலின் செய்து என் எச்சமே ஆவது அல்லது ஏனைக் காலத்திற்கு
உரிய செய என் எச்சத்தின் திரிபு எனப்படா என்க.

அஃதேல், மழை பெய்ய மரம் குழைத்தது எனச்செய எச்சத்திற்கு இறந்தகாலமும்
உரித்தால்எனின், அது காரண