மேற்கூறிய வரையறை இறந்தும் செய்து செய்யூ செய்யா செய்பு என்பன வருதல் உண்மையில் இந்நூற்பா வேண்டுவது ஆயிற்று. கை அற்று வீழ்ந்தான்- அறுதல் கையாகிய சினையின் தொழில்; வீழ்தல் சாத்தனாகிய முதலது தொழில். ஈண்டு அற்று என்ற சினைவினை வீழந்தான் என்ற முதல்வினையோடு முடிந்தமை பிறவினைமுதல் வினையொடு முடிந்ததாகக் கொள்ளப்படாது, முதலொடு சினைக்கு ஒற்றுமை உண்மையாக என்பது. பிறவும் அன்ன. ‘கண்துயின்று முன்றில் போகா முதிர்வினள் யாயும், என்ற தொடரில் துயிலுதல் கண்ணாகிய சினையின் தொழில்; போகாமை யாய் ஆகிய முதலின் தொழில். தாள் ஒற்றித் தப்பி வீழ்ந்தார் என்ற தொடரில் ஒற்றுதல் சினையாகிய தாளின் தொழில்; வீழ்தல் முதலாகிய மற்றவர் தொழில். வீழ்தலாகிய செயல் கை இறுதல் தாள் ஒற்றுதல் ஆகிய காரணத்தின் காரியம் ஆதலும், கிடத்தலாகிய செயல் கண் துயிலுதல் வலித்தல் வயிறு குத்தல் ஆகிய காரணத்தின் காரியம் ஆதலும் காண்க. ‘அகன்..........................................இல்’ என்ற பாடலில் அமர்தல் அகமாகிய சினையின் தொழில்; உறைதல் செய்யாளாகிய முதலின் தொழில். அமர்தல் முகமாகிய சினையின் தொழில்; ஓம்புதல் இல்வாழ்வானாகிய முதலின் தொழில். ‘காமன்.................புலர்ந்தாள்’ என்ற தொடரில் |