சிவத்தலாகிய கண்ணின் தொழில் புலர்தலாகிய தலைவி தொழில் கொண்டு முடிந்தவாறு. இவை காரணகாரிய பொருள அல்ல. ஞாயிறு பட்டு வந்தான் முதலிய தொடர்களில் படுதல் ஞாயிற்றது தொழில்; வருதல் சாத்தனது தொழில். உரல்கால் யானை ஒடித்துண்டு எஞ்சிய யா என்ற தொடரில் ஒடித்து உண்ணுதல் யானையின் தொழில்; எஞ்சுதல் யாமரத்தின் தொழில். ‘தலைவன் பிரிந்து வருந்தினாள்’ முதலியன செய என் எச்சம் காரண காரியப் பொருண்மையில் இறந்தகாலச் செய்து என் எச்சமாயும், தன் பொருட்டாதற்கண் வான் பான் பாக்கு எச்சங்களாயும் திரிந்த வழியே பிறவினை- முதல்வினை கொண்டதற்கு எடுத்துக்காட்டுக்களாம். ‘ஞாயிறு பட்டு வந்தான்.’ உரல்கால்யானை ஒடித்து, உண்டு எஞ்சிய யா’ என்புழிப் பட்டு, ஒடித்து உண்டு என்பன இறந்தகாலமே உணர்த்தலின் அவற்றைச் செயஎன் எச்சம் ஆக்காது செய்து என்எச்சமே பிறவினைமுதல்வினை கொண்டது எனக் கோடலே தக்கது. செயஎன் எச்சம் காரண காரியப் பொருண்மை உணர்த்தும் வழியே இறந்த காலம் உணர்த்தும். ஞாயிறு படுதல் இயற்கை நிகழ்ச்சி. யானை மரத்தை ஒடித்து உண்ணுதல் தன்பசி தீர்த்தற்கே. இவை முறையே சாத்தன் வருதற்கும் யாமரம் எஞ்சுதற்கும் காரணம் அல்ல; ஆகவே இத்தகைய பொருட்கண் வரும் செய்து என் எச்சத்தைச் செய என் எச்சத்திரிபு என்று கோடல் கூடாது. இந்நூற்பா சினைவினை முதலொடு செறியினும் தன் வினை முதல்வினையேயாம் என்பதனையும், செய்து என் எச்சம் தனக்கு உரிய இறந்தகாலத்தில் திரியாது சிறுபான்மை |