பிற வினைமுதல்வினை கோடலும் வழாநிலையேயாம் என்பதனையும் கூறுதற்கு எழுந்ததாகும்.‘ஆ கிடந்து செறு விளைந்தது’ என்ற தொடரில் இடம் செறு, அதன் கண் இருந்த பொருள் ஆ அதன் தொழில் கிடத்தல். இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின் வினையொடு முடிந்தது. ஆவால் கிடக்கப்பட்டது செறு; விளைந்ததும் செறு. எனவே செறு என்பதே வினை முதலாகவும் செயப்படுபொருளாகவும் வந்தவாறு. ‘பூண் அணிந்து விளங்கிய புகழ்சால் மார்ப’ என்ற தொடரில் அணியப்படுதலே சினையாகிய மார்பின் தொழில்; அணிதல் வினைமுதலாகிய சாத்தன்தொழில். அணிதலாகிய முதல் வினைவிளங்குதலாகிய மார்பு என்ற சினையின்வினைகொண்டு முடிந்தவாறு. உண்டு பசிகெட்டது- இத்தொடரில் உண்டல் சாத்தன் ஆகிய முதலின் தொழில்; பசி கெடுதல் சினையாகிய வயிற்றின் தொழில். ஈண்டும் முதல்வினை சினைவினையொடு முடிந்தது போன்ற நிலையேயாம். ஆகிடத்தல் காரணம்; செரு விளைதல் காரியம். பூண் அணிதல் காரணம்; மார்பு விளங்குதல் காரியம். உண்ணுதல் காரணம்; பசி கெடுதல் காரியம். இவ்வாறு காரண காரியப் பொருண்மைக்கண் முதல்வினை சினைவினை கொண்டு சிறுபான்மை முடிந்தவாறும் காண்க. இந்நூற்பா தொல்.சொல்.233இல் நச்சினார்க்கினியர் உரைத்த உரையை உட்கொண்டு வரையப்பட்டது. விளக்கமும் அந்நூற்பா உரையுள் அவர் தந்தனவே. ‘உரக்கால் யானை ஒடித்துண்டு எஞ்சிய யா’- விளக்கம். ‘உண்டு என்பது வினைமுதல் வினையொடு முடியாமையின் உண்ணா எனத்திரிதல் வேண்டிற்று (தொல்.சொல்.446-தெய்.) |