‘முதலில் நான்கும் வினைமுதல் கொள்ளும்’ என விதந்து ஓதவும் வேண்டா. அங்ஙனம் வேண்டலான், ‘பிறவினைபிறவினை முதலொடு முடியும்’ என்றல் அவர்க்கும் கருத்தன்று போலும் எனமறுக்க. ‘உரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய யா’
என்றாற்போல்வனவற்றிற்குப் பொருள்கோள் அறியாமையின் அவ்வாறு கூறினார். இன்னோரன்னவை எல்லாம் விருத்தியுள் காண்க. செம்து என்எச்சம் பிறவினையும் கொள்ளும் என்பார்க்கு தலைவன் பிரிந்து வருந்தினாள் என்றாற்போல்வனவற்றையும் செய்து என எச்சம் பிறவினை கொண்டன என்னாது செய என் எச்சத்திரிபு என்றல் எற்றிற்கு என்க. காரண காரியப் பொருட்டாய் இறந்தகாலம் உணர்த்துவன எல்லாம் செய என் எச்சத்திரிபாம் எனின், கையற்று வீழ்ந்தான், கண்ணொந்து கிடந்தான் என்றல் தொடக்கத்தனவற்றையும் காரணகாரியப் பொருட்டாய் இறந்தகாலம் உணர்த்துதல் பற்றிச்செயவென் எச்சத்திரிபு என்றல் வேண்டும் அங்ஙனம் கூறாது, அவற்றைச் செய்து என் எச்சம் என்றே கொண்டார், இவ்வாறு மயங்கக்கூறுதல் அவர்இயல்பு என்க. ‘ஆகிடந்து செறுவிளைந்தது’- ‘பூண் அணிந்து விளங்கிய புகழ்சால் மார்ப’- ‘உண்டு பசி கெட்டது’- என்றாற் போல்வனவும் காரண காரியப் பொருளவாய்ப் பிறவினை கோடலின், இவையும் செய என் எச்சத்திரிபு என்றே கொள்க. |