சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-22375

என மறுக்க”- என்ற கருத்தே தோன்றுதற்கு இடன் இன்று.

உரற்கால் யானை ஒடித்துண்டு எஞ்சிய’ என்பற்கு முனிவர் பிரயோக விவேக
நூலாரை அடியொற்றி ‘எஞ்சுவித்த’ என்ற பொருள் கொண்டமை பொருந்தாது
என்பதனைச் சண்முகனார் பாயிர விருத்தியுள் விரிவாக மறுத்துள்ளார். அங்ஙனம்
மறுக்கத்தக்க கருத்தினைக் கொண்ட இவர், சான்றோரை அடியொற்றி இவ்வாசிரியர்
கூறுவது பொருந்தாது என்பதன்கண் பொருத்தம் இன்மை காண்க.

செய்து என் எச்சம் பிற வினையும் கொள்ளும் என்ற இவ்வாசிரியர் கருத்து
இலக்கியத்தில் துறைபோய நச்சினார்க்கினியரை அடியொற்றியது. எச்சம் பற்றிய ஆசிரியர்
மதங்கள் பல உள. அவற்றுள் ஒருவகையைப் பின்பற்றிய இவ்வாசிரியரை முனிவர் தம்
கருத்தே முடிந்த முடிபு என்ற எண்ணத்தான் மறுக்க முற்பட்டமை வியப்பைத்
தருவதாகும்.
 

ஒத்த நூற்பாக்கள்:
 

  ‘அம்முக் கிளவியும் சினைவினை தோன்றின்
சினையொடு முடியா முதலொடு முடியினும்
வினைஓ ரனைய என்மனார் புலவர்.’

‘சென்று முதலோடு சேரும் சினைவினையும்’.

‘சினைவினை சினையொடும் முதலொடும் செறியும்’.


‘சொல்திரி யினும்பொருள் திரியா வினைக்குறை’
‘அம்முக் கிளவியும் சினைவினை நின்று
சினைவினை யொடுமுடி யாது முதலொடு
முடியினும் வினையான் ஒருதன் மையவே.’


தொல்.சொல்.231

நே.சொல்.49

நன்.345


346



மு.வீ.வி.22