சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-23377

எனவும் சிறுபான்மை வினைக்குறிப்பு ஆக்கம் இன்றி வருதலும் கொள்க. 23
 

விளக்கம்
 

வினையெச்சம் தெரிநிலைவினை குறிப்புவினை என்றஇரண்டனையும் கொண்டு
முடியும்; வினைக்குறிப்பில் ஆக்கச்சொல் தொக்கோ விரிந்தோ இருத்தல்வேண்டும்
என்பது.

உழுது வந்தான்- வினையெச்சம் தெரிநிலை முற்றினைக் கொண்டது.

உண்டு நல்லனாயினான்- ” குறிப்பு ”
                    ஓதிப் பெற்ற பொருள்- ” தெரிநிலைப்பெயரெச்சம்
                    ஓதி நல்ல சாத்தன்- ” குறிப்புப்
                    உழுதுபயன்கொண்டு- ” தெரிநிலைவினையெச்சம்
                    உழுதன்றி உண்ணான்- ” குறிப்பு
                    உழுது வந்தவன்- வினையெச்சம் வினையால்அணையும் பெயரைக்கொண்டு
முடிந்தது.

உழுதுவருதல்- வினையெச்சம் தொழிற் பெயரைக் கொண்டு முடிந்தது.

தலைவி தண்ணியள் ஆயினள் என்று கூறவேண்டிய இடத்தில் ‘தண்ணியள்’
எனவும், காகம் ‘சிரல்வாய ஆயின’ என்று கூறவேண்டிய இடத்தில் ‘சிரல்வாய’ எனவும்
ஆக்கம் இன்றி வந்தன.
 

ஒத்த நூற்பாக்கள்
 

 

முழுதும்
‘ஆக்க வினைக்குறிப்பு ஆக்கம்இன்று இயலா.’
தொல்.சொல்.432
நன்.347