எனவும் வருவன எல்லாம் இடக்கர் அடக்கல் இடக்கர், அவைஅல் கிளவி என்பன ஒரு பொருட் கிளவி. ஈகார பகரம் என்பது போலக் கண் கழுவுதல் முதலிய அவை அல்கிளவியைக் கிடந்தவாறு கூறாது பிறிது ஓர் ஆற்றான் கிளந்தன அல்ல எனினும் அவைஅல் கிளவிப் பொருண்மையை உணர்த்தலின், ஒற்றுமைநயத்தான் அவையும் அவை அல்கிளவியைப் பிறிது ஓர் ஆற்றான் கூறிய வாய்ப்பாடாகவே கொள்ளப்படும் என்க. செத்தாரைத்துஞ்சினார் என்றலும், சுடுகாட்டை நன்காடு என்றலும், ஓலையைத் திருமுகம் என்றலும், கெட்டதனைப் பெருகிற்று என்றலும் இவை போல்வன எல்லாம் மங்கலமரபினான் வருவன. பொற்கொல்லர் பொன்னைப்பறி என்றலும், வண்ணக்கர் காணத்தை நீலம் என்றலும் ஆனைப்பாகர் ஆடையைக் காரை என்றலும் இவை போல்வன எல்லாம் குழூஉக்குறி. முன்னைய மூன்றும் ஒரு காரணம் இன்றி இயல்பாய் வருதலின் இயல்பு வழக்கு என்றும், பின்னைய மூன்றும் உயர்ந்தோரும் இழிந்தோரும் இவ்வாறு உரைப்பது தக்கது என்று குறித்து வழங்கலின் தகுதி வழக்கு என்றும் ஆயின. இலக்கணப்போலி அடிப்பாட்டில் திரிக்கப்படாது முன்றில் எனவே சொல்லப்படும். மரூஉ இலக்கணத்தானும் சிலவானும் முறையே அருமருந்து அன்னான் எனவும் அருமந்தான் எனவும் சொல்லப்படும். இவை இரண்டற்கும் தம்முள் வேற்றுமை. மங்கலமொழி அவைஅல் கிளவி போல மறைத்தவாய்பாட்டானே சொல்லவேண்டும் என்னும் யாப்புறவு இன்றிச் செத்தார் என இலக்கண வாய்பாட்டானும், |