சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-1039

தகவு நோக்கித் துஞ்சினார் என மறைத்த வாய்பாட்டானும் சொல்லப்படும்; இவை இரண்டற்கும் தம்முள் வேற்றுமை. அற்றேல்,
 
 ‘மெழுகும் ஆப்பிகண் கலுழ்நீ ரானே’ புறம். 249
எனவும்,   
 ‘ஆப்பிநீர் எங்கும் தெளித்துச் சிறுகாலை’ 

எனவும்,
                    யானை இலண்டம், யாட்டுப்பிழுக்கை எனவும்,
                    இடக்கர் வாய்பாட்டானும் வழங்கப்படுமாலோ எனின்,

 ‘மறைக்குங் காலை மரீஇயது ஒராஅல்’
 
தொல்.சொல். 443
என்ப ஆகலின் இந்நிகரன மேல்தொட்டு மருவி வழங்கலின் அமைவு உடைய என்க.
 
‘பகல் கான்று எழுதரு பல்கதிர்ப்பருதி’ பெரும்பாண். 2
 

என்புழிக் கான்று என்னும் இடக்கர் அணிகுறித்துப் பிறிது ஒருபொருள்மேல்
நிற்றலின் மறைக்கப்படாமையும், தன் பொருள்மேல் நின்றுழியே மறைக்கப்படுதலும்
உரித்து எனக் கொள்க. வெள்யாடு முதலியவற்றை மங்கலமொழியே என்பாரும் உளர்.
அவை தகுதி நோக்காது வழங்கற்பாடே பற்றி வருதலின் மரூஉ ஆவது அல்லது
மங்கலமொழி ஆகாமை உணர்க. 10
 

விளக்கம்
 

மேலை வழக்கு என்றது - 160 ஆம் நூற்பா.
தொல்காப்பியனார் இலக்கணப்போலியையும் மருவினுள் அடக்குவர்

இல்முன்-முன்றில் என்றாகும்.
                    முன்என் கிளவி முன்னர்த் தோன்றும்
                    இல்என் கிளவிமிசை றகரம் ஒற்றல்