என்பதனான் உணரப்படும். இவற்றை இலக்கணத்தோடு பொருந்திய மரூ என்றலே தொல்காப்பியனார் கருத்து. இலக்கணத்தொடு பொருந்தாத மரூக்களை ‘வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும்’ தொல். 486 என்பதன்கண் அடக்குவர். அருமந்தான் முதலியன இத் தலைப்பினுள் அடங்கும். காராட்டை வெள்யாடு என்பதும், வேளாளரை வெண்களமர் என்பதும், புலையரைக் கருங்களமர் என்பதும் போல்வன பண்பு குறியாது சாதிப்பெயராய் உலகில் வழங்குதலாகிய காரணம் ஒன்று பற்றியே வருவன என்பதும், சிறிதளவு உள்ள நீரைச் சிறுநீர் என்றால் அஃது இடக்கர் பொருளதாம் ஆகலின் சிலநீர் என்றே கூறலும் போல்வன சேனாவரையர் முதலியோர் உரைகளிலும் விளக்கப்பட்டன. இடக்கர் அடக்கல் பற்றி இவர்வரைந்தனவும் ‘அவையல் கிளவி’ தொல். சொல். 442 ‘மறைக்குங்காலை’ 443 என்ற நூற்பாக்கள் உரையில் சேனாவரையரான் உரைக்கப்பட்டனவே. எடுத்துக்காட்டுக்கள் நச்சினார்க்கினியர் உரைத்தனவே. குழுஉக்குறி உயர்ந்தார் இழிந்தார என்ற இத்திறத்தார் வழக்கினும் வருவதாகும். வண்ணக்கர்- நாணயப்பரிசோதனை செய்வார். தொல்காப்பியனார் தகுதி எனவும் வழக்கு எனவும் பொதுவாகக் கூறியனவற்றை நன்னூலார் இயல்பு வழக்கு தகுதி வழக்கு என்று பெயரிட்டு வகைப்படுத்தியவாறே இவ் |