சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-1041

வாசிரியரும் குறிப்பிட்டுள்ளார். நேமிநாத உரையின் கண்ணும் இப்பாகுபாடு காணலாம்.

இலக்கணப்போலி அடிப்பாட்டில் திரிக்கப்படாது என்பதும் மரூ ஒலித்தல்
எளிமைகருதிப் பின்னவரால் திரிக்கப்பட்டது என்பதும் ஆகிய வேற்றுமை கருதிப்
பின்னுள்ளோரால் வேறுபடுத்து வழங்கப்படுவன ஆயின.

இடக்கர் அடக்கலை மறைத்தே கூறல் வேண்டும்; மங்கலத்தை
உள்ளவாறேசொல்லுதலோடு தகவுநோக்கி மறைத்த வாய்பாட்டானும் சொல்லலாம்.
 

 ‘செத்தாரைச் சாவார் சுமந்து’
‘ஒவ்வாச் சுடுகாட்டு உயர் அரங்கில்’
‘காதுவேல் மன்னன் ஓலை’
‘கெட்டான் எனப்படுதல் நன்று’
 
நாலடி. 24
சிந். 309
சூளா. தூதுவிடு. 84
குறள். 967
 
எனச் சான்றோர் செய்யுட்கண் செத்தார், சுடுகாடு, ஓலை, கெட்டார் என்ற சொற்கள்
இயல்பாகவும் வந்தவாறு காண்க. இவை தகுதிநோக்கி மறைத்த வாய்பாட்டான்
கூறப்படுதல், ‘குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்’ ‘நன்காடு’ ‘திருமுகத்தில் எழுத்து
இதுவேல்’ (மதுரைக் கலம்பகம்) ‘மங்கலம் பெருக’ (பெரியபுராணம்) எனச் சான்றோர்
வழக்கும் செய்யுளும் நோக்கி அறிக.

‘பகல்கான்று’ என்பது பகலைக்கக்கி எனப் பொருள் படாது பகலை வெளிப்படுத்தி
என்று பொருள்பட்டவாறு காண்க; இதனைச் சமாதி என்ற செய்யுட் குணம் என்ப.
வேள்வி ஆடு வெள்ளாடு என்றாயிற்று என்பாரும் உளர்.
 

சூறாவளி
 

குழூஉக்குறியையும் வழக்கு நெறி என உடன் எண்ணினார். குழுவின்வந்த
குறிநிலைவழக்கு சான்றோர் வழக்கின்