இன்றும் குழூஉக்குறி சான்றோர் வழக்கினுள்ளும் காணப்படுதல் கண்கூடு. காலவேறுபட்டான் எல்லோருக்கும் விளங்காது போகலாம் என்று சான்றோர் செய்யுட்கண் அவற்றைக்கையாளாது விடுத்திருக்கலாம். குழூஉக்குறி சான்றோர் செய்யுட்கண்ணும் அருகி வருதல் கலம்பகம் முதலியவற்றில் காணப்படுவது ஒன்றாம். தமக்கு விருப்பமான இடத்தில் ‘சேனாவரையர் மறுத்தார்’ என்று அவர் கூற்றினைக் காட்டி இவ்வாசிரியர் கருதை முனிவர் மறுக்க முற்படுகிறார்! நன்னூல் விருத்தியுள் இதுபற்றிய குறிப்பு எதுவும் காணப்படாமை பெருவியப்பைத் தருகிறது. கள்ளி னைக்களியர் ‘எழுதாததொர் திருமந்திரம்’ என்றுகுறிப்பிடுவது மதுரைக்கலம் பகத்து 25ஆம் செய்யுளான் அறிக. |