என்ப ஆகலின், அந்நால்வகைச் சொற்களான் பொருட்கு இடனாக அறிவினால் கற்றுவல்லோர் அலங்காரம் பெறச் செய்வது செய்யுளாம் என்றவாறு.சொல்லும் எழுத்தான் பெறப்படுதலின், எழுத்து சொல் பொருள் அணி என்ற நான்கனானும் இயல்வது செய்யுள் ஆயிற்று. ஆகவே, இவ்வைந்தும் தம்முள் ஒன்றைஒன்று இன்றியமையா என்பதூஉம் பெற்றாம். வரலாறு: வருங்குன்றம் ஒன்றுஉரித் தோன்தில்லை அம்பல வன்மலையத்து இருங்குன்ற வாணர் இளங்கொடியேஇடர் எய்தல்எம்மூர்ப் பருங்குன்ற மாளிகை நுண்களபத்துஒளி பாயநும்மூர்க் |