இது மேல் வெளிப்படை குறிப்பு என்பன இவை என்று அவற்றின் இயல்பு கூறுகின்றது. இ-ள்: ஆகுபெயர் முதலியனவும் இவைபோல்வன பிறவும் ஆகிய சொற்கள், சொல் மாத்திரத்தான் பொருளை விளக்காது சொல்லொடு கூடிய குறிப்பான் பொருளை விளக்கும் சொற்களாம். இத்தன்மையன அன்றி வரும் எல்லாச் சொற்களும் சொல்மாத்திரத்தான் பொருளை விளக்கும் வெளிப்படைச் சொற்களாம் என்றவாறு. எ-டு: கடுத்தின்றான்- புளித்தின்றான்- என ஆகுபெயர் அவற்றது காய் ஆகிய பிறிதுபொருளையும், கரியன் செய்யன் என வினைக்குறிப்புமுற்று அவற்றது வினையாகிய இன்னனாய் இருந்தான் என்பதனையும், |