| ‘பொற்றொடி தந்த புனைமடல்’ ‘அறல் கூந்தற்கு இல்லை அருள்’ | |
என அன்மொழித்தொகைச் சொற்கள் அவற்றை உடையாளையும், |
| ‘மரைமலர்’ ‘குலிகமொடு இகலிய அங்கை’ ‘வேதின வெரிநின் ஓதிமுது போத்து’ ‘நீல்நிறப் பெருங்கடல் பாடுஎழுந்து ஒலிப்ப’ |
குறுந். 140 அகநா- 40 |
என விகாரச்சொற்கள் முறையே தாமரை-ஓந்தி-நீலம்-என்பனவற்றையும், ‘குன்றா வினையுள் உயர்நிலன் துன்புற்றுத்தாஎன்று இரப்பாள் தன்கை’ ‘அறத்தாறு இதுவென வெள்ளைக்கு இழிபு’ யா. கா.15
என ஒருசொல்லின் முதல்நிற்கும் எழுத்துமாத்திரமே விதந்தூஉம் ஒரு பாட்டின் முதன் நிற்கும் சொல் மாத்திரமே விதந்ததூஉம் முறையே குரலும் விளரியும் உழையும் துத்தமும தாரமும் இளியும் கைக்கிளையும் ஆகிய சொற்களையும், அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானொடு ஊர்ந்தான் இடை குறள். 37 என்னும் பாட்டையும், |
| ‘அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ’ | புறம். 2 |
என ஐவர் என்னும் தொகைச்சொல் அறமகன் முதலிய ஐவரையும், |
| ‘புலிநின்று இறந்த நீர்அல் ஈரத்து’ | நற். 103 |
திருமுகம்- பறி- எனத்தகுதி வழக்கு மூன்றும் முறையே இடக்கர் வாய்பாட்டான் உணரும் நீரையும் ஓலையையும் பொன்னையும், ஒருவரான் அறிவுபெற்றேன்- கல்கறிக்க நன்கு அட்டாய்- எனக் குறிப்புச்சொற்கள் முறையே ஆண் |