பாலையும் தீங்கு அட்டாய் என்பதனையும் சொல் மாத்திரத்தான் அன்றிச் சொல்லொடு கூடிய குறிப்பான் விளக்கியவாறு காண்க. |
| ‘இளைதாக முள்மரம் கொல்க களைகுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து.’ | குறள். 879 |
என்னும் தொடர்மொழி, நிலைபெற்றால் களையல் உறின் கலையல் உற்றாரை அவர்தாம் கொல்வர்; அதனால் தீயாரை அந்நிலை பெறாக்காலத்தே களைக; என்னும் பொருளை விளக்குதலும் குறிப்பின் தோன்றுதலாம். அணி இலக்கணம் கூறுகின்றார் இன்னோரன்னவற்றைப் பிறிது மொழிதல் என்பது ஓர் அணி என்ப. |
| இனி, இன்ன பிறவாவன, ‘நாவலொடு பெயரியபொலம்’ ‘திங்கள் விரவிய பெயரினான்’ | முருகு.18 சீவக-671 |
என்றால் போல்வன; சாம்பூநதம், புத்திசேளன் என்பவற்றைக் குறிப்பான் விளக்கி நிற்றலின். இனி வெளிப்படைச்சொல் அவன்- இவன் உவன் வந்தான்- சென்றான்- என முறையே பொருளையும் பொருளது புடைபெயர்ச்சியையும் சொல் மாத்திரத்தான் விளக்கியவாறு காண்க. அடுநறா, (குறள்.1060) ‘பறவாக்குளவி’ ‘பாயாவேங்கை’ (தண்டி.) என்றாற்போல்வனவும் அன்ன; விழியினையும் கான மல்லிகையினையும் வேங்கை மரத்தையும் பொதுமையின் நீக்கி முறையே விளக்கி நிற்றலின். பிறவும் அன்ன. |
விளக்கம் |
மேல் என்றது 166 ஆம் நூற்பாவினை இவ்வாசிரியர் ‘ஒன்றொழி பொதுச்சொல்’ என்னும் நூற்பாவினுள் நன்னூலார் கூறியனவற்றுள் ஒன்றொழி |