சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-1247

பொதுச்சொல்லைப் பின்னர்ப் ‘பெயரினும் தொழிலினும்’ இ. வி. 324 என்ற நூற்பாவின்
விளக்குதலின் அதனை விடுத்து ஏனையனவே கொண்டுள்ளார்.

கடு, புளி - கடுக்காய் புளியங்காயை உணர்த்தின.
                    கரியன் - கரியனாயிருந்தான் என்றாற் போலக் காலம் காட்டியது.

பொற்றொடி பொன்னாலாகிய தொடியினை உடையாளையும் அறற்கூந்தல்
கருமணல் போன்ற கூந்தலுடையாளையும் குறித்தன. மரை தாமரையையும், ஓதி
ஓந்தியையும், நீல் நீலத்தையும் உணர்த்தின.

‘குன்றா விளையுள்’ என்ற பாடல் ஒவ்வொரு சீரின் முதல் எழுத்தை அடியொற்றிய
குரல் முதலிய பண்களை உணர்த்திற்று.

நாவல்-சாம்பு- எனவே சாம்புநதம் என்ற பொன்வகையை உணர்த்தியது. திங்கள்
விரவியபெயர்- திங்கள் மதி; மதி புத்தி- புத்தி புத்திசேனனை உணர்த்தியது; நறா- கள்,
நறவம்பூ; குளவி- ஒருவகைத்தேனீ, காட்டுமல்லிகை; வேங்கை- ஒருமரம், புலி; இவை
அடுநறா, பறவாக்குளவி, பாயாவேங்கை என்ற அடைகளால் பொதுவாந்தன்மை நீக்கி
முறையே கள், மல்லிகை, மரம், என்பனவற்றைக் குறித்தன.
 

சூறாவளி
 

‘அறத்தாறு இதுவென வெள்ளைக்கு இழிபு’
என்பது ஆகுபெயருள் அடங்குதலின் வேறு ஓதுதல் பொருந்தாது.
                    ‘குன்றா விளையுள் உயர்நிலன் துன்புற்றுத்தாஎன்று இரப்பாள் தன் கை’
என்றாற்போல எழுத்துக்களை எடுத்துக்கொண்டன சொல்