என்பது சூத்திரம். நிறுத்தமுறையானே இடைச்சொல் இயல் உணர்த்துகின்றமையின், இவ்வோத்து இடைச்சொல் இயல் என்னும் பெயர்த்து. இதனுள் இத்தலைச் சூத்திரம் அதன் பாகுபாடும் அதன் இயல்பும் கூறுகின்றது. இ-ள்: செயப்படுபொருள் முதலாகிய வேற்றுமைப்பொருட்கண் உருபு என்னும் குறியவாய் வருவனவும், வினைப் பகுபதங்களைப் பிரித்து முடிக்கும் இடத்துக் காலம் காட்டும் கடதற முதலிய இடைநிலை உருபாயும் திணையும் பாலும் இடனும் காட்டும் அன்ஆன் முதலிய இறுதிநிலை உருபாயும் வரும் வினைஉருபுகளும், இருமொழி தம்மில் புணரும் இடத்து அவற்றின் பொருள் நிலைக்கு உதவி செய்து பெரும்பாலும் இன்னொலியே பயனாக வரும் அன்ஆன் முதலிய சாரியை உருபுகளும், ஒப்புமைப் பொருண்மையை உணர்த்திவரும் போல- மான முதலிய உவம உருபுகளும், தமதுதமது குறிப்பினாலே பிரிநிலை முதலிய பொருளை உணர்த்தி நிற்கும் ஏ- ஓ- முதலியனவும், வேறுபொருள் உணர்த்தாது செய்யுட்கண் இசைநிறைத்தலே பொருளாக வரும் ஏ-ஓ- முதலியனவும், தமக்கு ஒரு பொருள் இன்றித் தாம் சார்ந்த பெயர் வினைகளை அசையச் செய்யும் நிலைமையவாய் வரும் மியா- இக- முதலியனவும் ஆகிய இவ்வகை ஏழானே தனித்து நடத்தல் இன்றி, ‘அதுமன்’ ‘அதுமற்றம்மதானே’ |