எனவும், ‘கொன்னூர்’ (குறுந். 138) ஓஒ பெரியன் எனவும், வருகதில் எனவும், ‘வருகதில் அம்ம’ (அகம். 276) எனவும், ஓஒ தந்தார், ‘ஏஎ அம்பல் மொழிந்தனள் யாயே’ எனவும் பெயரின் கண்ணும் வினையின் கண்ணும் பின்னானும் முன்னானும் ஓர் இடத்து ஒன்றானும் பலவானும் வந்து பொருந்தி நிற்பது மேல் நிறுத்திய இடைச்சொல்லாம் என்றவாறு.பின்னும் முன்னும் நிற்குமேனும் இடை நிற்றலும் இடை நிற்றல் பெரும்பான்மை என்பதூஉம் பெறுதற்கு ‘இடைச்சொல்’ என்றார். ‘தனித்து இயல் இன்றி’ எனப் பொதுப்படக் கூறிய அதனால் சாரப்படும் சொல்லின் வேறாய் வருதலே யன்றி, உண்டான்-என்றிசினோர்- அருங்குரைத்து- என உறுப்பாய் வருதலும் கொள்க. வருவது என்னாது ‘வந்து ஒன்றுவது’ என்ற மிகையானே, |
‘உடன் உயிர் போகுக தில்லை’ என ஈறு திரிதலும், ‘மன்னைச் சொல்லே’ ‘கொன்னைச் சொல்லே’ எனத் தம்மை உணர நின்ற வழியும் ஈறு திரிதலும், ‘னகாரை முன்னர்’ | குறுந்.57
தொல்.சொல்.252
254
தொல். 52 |