சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

இடைச்சொல்இயல்-நூற்பா-1387

   ‘ஊர்க்கால் நிவந்த பொதும்பர்’
என ஏழாவதன் பொருளவாய் வரும் கண்- கால்- முதலியனவும்,

   ‘அனையை ஆகல் மாறே’

   ‘சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே’

   ‘இயல்புளிக் கோலோச்சும் மன்னவன்’

என மூன்றாவதன் பொருளவாய் வரும் மாறு- உளி- என்பனவும், பிறவும் ஆம்.

   ‘மந்திர விதியின் மரபுளி வழாஅ,
       அந்தணர் வேள்வி’

கலி.56



புறம். 4

 நற். 40

குறள்.545




முருகு-95
 
என உளி ஐந்தாவதன் பொருட்டாயும் வரும்.

‘கூறாய் தோழியான் வாழு மாறே’

என்புழி, வாழுமாற்றை என இரண்டாவது விரிதலின் அது மாறு அன்று; ஆறு
என்பது. வாழும் நெறியை என இரண்டாவது விரிந்து நின்றதாம் என்க. இவ்வாறு
வருவனவற்றைப் பகுதிப்பொருள் விகுதி என்பாரும் உளர்.

இன்னும் அதனானே, வினைஉருபு என்றாரேனும் உண்டவன்- உண்டவள்- நம்பி-
நங்கை- என வரும் தொழிற்பெயரும் பெயர்ப்பெயரும் முதலியனவும் இவ்விடைச்சொல்
பெற்று வருதல் கொள்க சாரியை பொருள் நிலைக்கு உதவுதலாவது எல்லாவற்றையும்
என்புழி அற்றுச்சாரியை நிலைமொழிப் பொருள் இருதிணைக்கும் பொதுவாயினும்
அஃறிணை என்பது படவருதலும், எல்லாநம்மையும் என்புழி நம்முச்சாரியை அப்பொருள்
உயர்திணைத்தன்மைப்பன்மை என்பதுபட வருதலுமாம். ஒழிந்தனவும் தாம் சார்ந்து வரும்
மொழிப் பொருட்கு உபகாரம் உடையவாமாறு ஓர்ந்து உணர்க.