சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

388 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இன்னும் அதனானே, காரம், கரம், முதலிய எழுத்துச் சாரியையும் கொள்க.

இவ்விடைச்சொல் திறம் ஏழனுள் முன்னைய மூன்றும் முன்னர்
உணர்த்தப்பட்டமையானும், உவம உருபு மேல் உணர்த்தப்படுதலானும், ஒழிந்த மூன்றும்
இவ்வோத்தின் அகத்து உணர்த்தப்படும் என்று உணர்க. குறிப்பு என ஒன்று கூட்டித்
திறம் எட்டு என்பாரும் உளராலோ எனின், அது தத்தம் பொருள என்பதனுன்
அடங்குதல், ‘வினைபெயர் குறிப்பு இசை’ 255 என்பதனான் பெறப்படுதலின் மிகைபடக்
கூறல் என்க. 1
 

விளக்கம்
 

பெயரியல் வினையியல் என்பன தெளிவாகப் பெயர்ச் சொல் இயலுமாற்றையும்,
வினைப்பகுதி இயலுமாற்றையும் சுட்டுவதனால் அப்பெயரவாயின.

இடையியல் என்பது இடையில் இருக்கின்ற இயல் எனவும் பொருள்படுதல் கூடும்;
இச்சொற்படலத்து ஐந்து இயல்களுள்ளும் இஃது இடையில் அமைந்து இருத்தலின்
அப்பெயர்த்து ஆயிற்றோ என்று ஐயுறுதற்கும் இடன் ஏற்படும். அத்தகைய ஐயத்திற்கு
இடன் இன்றி இவ்வியற்கு ‘இடைச்சொல்இயல்’ என்று பெயரிட்டார். உரியியல் என்பதும்
உரிமையுடைய இயல் என்றாற் போல மயக்கத்துக்கு இடன் தருதலின், ஐயமின்றி
உணர்தற்கு உரிச்சொல்லியல் என்று பெயரிட்டார். இங்ஙனம் பெயரிடுதல்
முன்னையோர்க்கும் கருத்து என்பது நேமிநாத நூலார் இடைச் சொல் மரபு, உரிச்சொல்
மரபு என்று பெயரிட்டுள்ளது கொண்டும் உணர்க.

மயிலைநாதர் இடைச்சொல் இயல், உரிச்சொல் இயல் எனப் பெயரிட்டதும் காண்க.
நிறுத்தமுறை- ‘இயற்சொல் திரிசொல்’ (171) என்ற நூற்பாவில் நிறுத்தமுறை.