சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

390 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

கண், கால் முதலியன ஏழன் உருபு அல்ல; உருபின் பொருள்படும் பெயர்ச்
சொற்களே என்ற சேனாவரையர் கொள்கையைப் பின்பற்றுபவர் இவ்வாசிரியர் என்க.

கண் அகல்-இடமகன்ற- ஏழன்பொருட்டு.
                    ஊர்க்கால் நிவந்த-ஊரிடத்துஉயர்ந்த- ஏழன்பொருட்டு

ஆகல்மாறே- ஆகின்ற காரணத்தான்
                    பிறந்தமாறே- பிறந்த காரணத்தான் மூன்றன்பொருள.
                    இயல்புளி- இயல்பானே

மரபுளிவழாஅ- மரபினின்றும் வழுவாத- ஐந்தன்பொருட்டு.

வாழுமாறு- வாழும்ஆறு- வாழும்நெறி- எனவே மாறு என்ற இடைச்சொல்
ஆண்டுஇன்று; ஆண்டு உள்ளது ஆறு என்ற பெயரே என்பது.

‘ஆகன்மாறே’ முதலியன வினையை அடுத்துக் காரணப் பொருள் முதலியனவும்
பெயரையடுத்து வேறு பொருளும் உணர்த்தித் தமக்கு எனச் சிறப்பான பொருளின்றி
நிற்றலின் அவற்றைப் பகுதிப்பொருள் விகுதி என நச்சினார்க்கினியர் கொண்டனர்.

உண்டவன் என்றபெயரில் அன்விகுதியும், உண்டவள் என்ற பெயரில் அள்
விகுதியும் இடைச்சொல்.
 

‘நம் ஊர்ந்து வரூஉம் இகர ஐகாரமும்.’
 

தொல்.சொல். 163
என்பதனால், நம் என்ற பகுதியோடு இகர விகுதியும் ஐகார விகுதியும் சேர்ந்தே நம்பி,
நங்கை என்ற சொற்கள் உண்டாயின என்பது தொல்காப்பியனார் கருத்து. அதனை
உட்கொண்டு இ, ஐ என்பனவாகிய விகுதிகள் இடைச்சொல்லாம் என்றார் இவ்வாசிரியர்.

உண்டவன் முதலியன வினையால்அணையும் பெயர்;