சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

இடைச்சொல்இயல்-நூற்பா-1393

சேனாவரையர் உரைத்ததனோடு ‘முன்னும் பின்னும் நிற்குமேனும்
பெரும்பான்மையும் இடையே நிற்றலின் இடைச்சொல் என்றார்’ என்பர்
நச்சினார்க்கினியர். சொல்.251
 

ஒத்த நூற்பாக்கள்:
 

‘இடைஎனப் படுப பெயரொடும் வினையொடும்
                    நடைபெற் றியலும் தமக்கியல் பிலவே’.

‘அவைதாம்,

புணரியல் நிலையிடைப் பொருள்நிலைக்கு உதநவும்’
                    வினைசெயல் மருங்கின் காலமொடு வருநவும்
                    வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும்
                    அசை நிலைக் கிளவி ஆகி வருநவும்
                    இசைநிறைக் கிளவி ஆகி வருநவும்
                    தத்தம் குறிப் பின் பொருள்செய் குநவும்
                    ஒப்பில் வழியால் பொருள்செய் குநவும் என்று
                    அப்பண் பினவே நுவலுங் காலை.’

‘சாரியையாய் ஒன்றல் உருபாதல் தங்குறிப்பில்
                    நேரும் பொருளாதல் நின்றசையாய்ப்-பேர்தல்
                    வினைச்சொற் கீறாதல் இசைநிறைத்து மேவல்
                    இனைத்தே இடைச்சொல் அளவு.’

வேற்றுமை வினைசா ரியைஒப்பு உருபுகள்
                    தத்தம் பொருள இசைநிறை அசைநிலை
                    குறிப்புஎன் எண்பகுதியின் தனித்துஇயல் இன்றிப்
                    பெயரினும் வினையினும் பின்முன் ஓரிடத்து
                    ஒன்றும் பலவும்வந்து ஒன்றுவது இடைச்சொல்.’



தொல்.சொல்.249









தொல்.சொல்.250




நே.சொல்.51





நன்.420