இதுவும் அது. இ-ள்: ஒழியிசைமுதலாகப் பிரிநிலை ஈறாகக் கிடந்த பொருள்நிலையும் அசைநிலையும் எனச் சொல்லப்பட்ட எட்டு வகையினையும்பற்றி நிகழும் ஓகார இடைச்சொல் என்றவாறு. உ-ம் கொளலோ கொண்டான் என்பது கொண்டு உய்யப் போகல்ஆயினாள் அல்லன் என்பது முதலிய ஒழியிசை நோக்கி நிற்றலின் ஒழியிசை ஓகாரம். சாத்தன் உண்டானோ என்பது வினாஓகாரம். ஓஒ பெரியன் என்பது பெருமைமிகுதி உணர்த்தலின் சிறப்பு ஓகாரம்; |