சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

இடைச்சொல்இயல்-நூற்பா-3397

  ‘நீங்கினளோ என் பூங்கண் ணாளே’  

என்பதும் அது.
 

‘யானோதேறேன் அவர் பொய்வழங் கலரே’
என்பது தேறுவார் பிறரின் பிரித்தலின் பிரிநிலை ஓகாரம்.
குறுந். 21
 
 
 
  ‘சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ’ அகம். 46

என்பது பொருள் குறியாமையின் அசைநிலை ஓகாரம்;
 
  ‘காணிய வம்மினோ கங்குலது நிலையே’  

என்பதும் அது. 3
 

விளக்கம்
 

பொருள் நிலைகளை முன்னர்க்கூறி அசைநிலையைத் தனியே கூறினார்.

ஓஒபெரியன்- சிறப்பின்கண் அளபெடுத்தது. 254.
                    இவள் யாவள் என ஆராய்தலின் தெரிநிலை என்றார்.

கானம் கார் எனக் கூறினும் தலைவி அதனிற் பிரிந்து தேறேன் என்றலின்
பிரிநிலை. யாரோ, வம்மினோ- முறையே பெயர் வினைகளை அடுத்து ஓகாரம்
அசையாயிற்று.
 

ஒத்த நூற்பாக்கள்:
 

  ‘பிரிநிலை வினாவே எதிர்மறை ஒழியிசை
தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ
இரு மூன்றென்ப ஓகா ரம்மே.’

‘சிறப்பும் வினாவும் தெரிநிலையும் எண்ணும்
உறப்பின் எதிர்மறையி னோடும்- வெறுத்த
ஒழியிசையும் ஈற்றசையும் ஓகாரம்.’
 


தொல்.சொல்.256




நே. சொல்.55