சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

398 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

   ‘ஒழியிசை வினாச்சிறப்பு எதிர்மறை தெரிநிலை
       கழிவு அசை நிலைபிரிப்பு எனஎட்டு ஓவே.’      நன்.423

  ‘ஓ-பிரிப்பு அசைநிலை ஒழிவுஎதிர் மறைவினா
      தெளிவு கழிவு சிறப்பென எட்டே’       தொ.வி.132

  ‘தெரிநிலை எதிர்மறை சிறப்புப் பிரிநிலை
      ஒழியிசை வினாஆறுஓகா ரம்மே.’       மு.வீ.ஒ.6
 

மேலவற்றுக்குச் சிறப்புவிதி

254 தெளிவின் ஏயும் சிறப்பின் ஓவும்
அளபின் எழுந்த இசைய என்ப.

      இது முற்கூறிய ஏகாரத்துள் ஒன்றற்கும் ஓகாரத்துள் ஒன்றற்கும் சிறப்பு விதி
கூறுகின்றது.

  இ-ள். தெளிவின்கண் வரும் ஏகாரமும் சிறப்பின்கண் வரும் ஓகாரமும் அளவான
மிக்க இசையை உடைய என்று சொல்லுவர் ஆசிரியர் எ-று.

அளபெடையான் வந்தன மேற்காட்டியவற்றுள்ளும் பிறாண்டும் கண்டு கொள்க. 4
    

விளக்கம்
 

உண்டேஎ மறுமை- தெளிவின்கண் வந்த ஏகாரம்.
                    ஓஒ உவமன் உறழ்வின்றி ஒத்ததே- சிறப்பின் வந்த ஓகாரம்.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  முழுதும் -       தொல்.சொல். 261

  ‘எகர ஒகரம் பெயர்க்கு ஈறு ஆகா
      முன்னிலை மொழிய என்மனார் புலவர்
      தேற்றமும் சிறப்பும் அவ்வழி யான.’       தொல்-272