சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

இடைச்சொல்இயல்-நூற்பா-5399

‘என’ ‘என்று’- என்னு மிடைச்சொற்கள்
 

255 வினைபெயர் குறிப்புஇசை பண்புஎண் ஆறினும்
எனஎன் மொழிவரும் என்றும் அற்றே.
 
 

இஃது எனவும் என்றும் பொருள்படுமாறு கூறுகின்றது.

இ-ள்: வினைப்பொருள் முதலிய ஆறு பொருண்மைக் கண்ணும் எனஎன்னும்
இடைச் சொல் வந்து இயையும்: என்று என்னும் இடைச்சொல்லும் அவ்வாறு
பொருண்மைக் கண்ணும் என என்பதுபோல வந்து இயையும். என்றவாறு.

எ-டு: கார்வரும் எனக்கருதி நொந்தாள் என்பது வினைப்பொருண்மை.
    

  
 
‘மலைவான் கொள்கென உயர்பலி தூஉய்’ புறம்.143

  என்பதும் அது.
 

  ‘அழுக்காறு என ஒருபாவி’ குறள்.168
 
என்பது பெயர்ப் பொருண்மை.

துண்ணெனத் துடித்தது மனம் என்பது குறிப்புப் பொருண்மை.

ஒல்லென ஒலித்தது என்பது இசைப்பொருண்மை.
வெள்ளென வெளுத்தது என்பது பண்புப்பொருண்மை.

நிலன்என நீர்எனத் தீஎன வளிஎன வான்எனப் பூதங்கள் ஐந்து என்பது
எண்ணுப்பொருண்மை.
 

  ‘கடலெனக் காற்றெனக் கடுங்கண் கூற்றென
உடல்சின உருமென ஊழித் தீயென’
என்பதும்அது.

இனி என்று வருமாறு:
‘நரைவரும் என்று எண்ணி’

சீவக.973



நாலடி.11