இதுவும் அது. இ-ள் எதிர்மறைப் பொருண்மை முதலாக ஆக்கப் பொருண்மை ஈறாகக்கிடந்த பொருள்வகை எட்டனையும் பற்றி நிகழும் உம்மை இடைச்சொல் என்றவாறு. வரலாறு: சாத்தன் வருதற்கும் உரியன் என்பது வாராமைக்கும் உரியன் என எதிர்மறையை ஒழிபாக உடைத்தாய் நிற்றலின் எதிர்மறை உம்மை. இஃது எச்சத்தின்பால் படுமேனும், பிறிது ஒரு பொருளைத்தழுவாது ஒருபொருளின் வினையை மறுத்தலின் எதிர்மறை என அதனின் வேறு ஆயிற்று. சிறப்பு உம்மை உயர்வு சிறப்பும் இழிவு சிறப்பும் என இருவகைத்து, |