சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

404 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

‘மறப்பினும் ஓத்துக் கொளலாகும்’

என்புழி மறப்பினுடம் என்னும் உம்மை மறக்கலாகாது என்னும் எதிர்மறைப்
பொருள்தந்து நிற்றலின், இன்னோரன்னவையே எதிர்மறை உம்மையாம் என்பது.

‘ஒன்று இரப்பான்போல் இளிவந்தும் சொல்லும்’
என்பதன்கண் வருவனவற்றை ஐய உம்மை என்றார்.

‘திருமகளும் அல்லள் அரமகளும் அல்லள்’ என்பதனொடு ‘மதுகையும் உடையன்
அடக்கமும் உடையன் வண்மையும் உடையன்’ என்பதன்கண் வேற்றுமை
இன்மையானும், மதுகை உடையவனோ அடக்கம் உடையவனோ வண்மை
உடையவனோ என ஐயப்பொருள் தாராமையானும்,
 

  ‘அன்னான் ஒருவன்தன் ஆண்டகைமை விட்டென்னைச்
சொல்லும்சொல் கேட்டி சுடரிழாய் பன்மாணும்’
 

எனத் தோழி தலைவன் தன்மைகளை எடுத்துக்காட்டி அத் தன்மைகளை உடையான்
ஒருவன் சொல்லும் சொல்லைக் கேட்பாயாக எனத் தலைவிக்கு அறிவுறுக்கின்றாள்
என்பதே அல்லது ஐயுற்றுக் கூறுகின்றாள் அல்லள் ஆகலானும் அது பொருந்தாது என
மறுக்க. அவன் வெல்லினும் வெல்லும் என்பது துணியாமைக்கண் வருதலின்
இன்னோரன்னவையே ஐய உம்மையாம். பத்தரனும் எட்டானும் எனக்காட்டுவாரும்
உளர். திருமகளும் அல்லள், அரமகளும் அல்லள் என்பதும் எச்சவும்மை என மறுக்க.

நெடியனும் வலியனும் ஆயினான் என்பது எண்ணும் உம்மை என மறுக்க.
இதுவே சேனாவரையருக்கும் கருத்தாதல் அவர் உரையான் உணர்க. முற்றும்மை
எச்சப்படுவது எதிர்மறை வினைக்கண் அன்றி விதிவினைக்கண் இன்று என மறுக்க.
அவர் பெயரெச்சச் சூத்திரத்துள் ‘அறுபொருட் பெயரொடும் முடியும் முறையது’ என்புழி
முற்றம்மையை எச்சமாக்கிப் பிறபொருட் பெயரொடும் முடியும் எனக்கொள்க என்றார்.
ஆண்டு இதனை மறந்தார் போலும். ஏனையவும் ஓர்ந்து உணர்க.