இஃது ஓர் உம்மை பிறிது ஓர் உம்மைப் பொருளும் தரும் என வழு அமைக்கின்றது. இ-ள்: முற்றும்மை தன்முடிபாகிய வினையைச் சார்ந்த தொகை உணர நிற்கும் பெயரிடத்து எச்ச உம்மைப் பொருட்டும் ஆம் என்றவாறு. வரலாறு: பத்துங்கொடல்- அனைத்தும் கொடால்- என்புழி, முற்றும்மைப்பொருள்- உணர்த்தாது சில எஞ்சக் கொடு என்னும் பொருள் உணர்த்தி நின்றவாறு காண்க. தன்முடிபு ஆகிய வினை கொடால் என்பது; அதனைச்சார்ந்த தொகை உணர நிற்கும் பெயர் பத்தும் அனைத்தும் என்பன ‘எச்சமும் ஆகும்’ எனவே, எச்சப்பொருண்மை குறியாது நிற்றலே பெரும்பான்மை என்பதாம். ஏற்புழிக் கோடலான், எச்சப்படுவது எதிர்மறை வினைக் கண் என்று கொள்க. பத்துங்கொடு என்பது பிறவும் கொடு என்பது பட நிற்றலின், விதிவினைக்கண்ணும் எச்சம் குறிக்கும் என்பாரும் உளர். இப்பொழுது பத்துங்கொடு என்பது கருத்தாயின் |