இப்பொழுது பத்துக்கொடு என உம்மை இன்றியும் பொருள் பெறப்படும். பத்தும்கொடு பிறவும் கொடு என்பது கருத்தாயின் அஃது எச்ச உம்மை ஆதலின் ஈண்டைக்கு எய்தாதது. அதனால் அது பொருத்தம் இன்று என்க.எல்லாரும் வந்திலர்- எல்லாம் வந்தில- என்புழிச் சிலர் வந்தார்- சில வந்தன- எனச்சிறுபான்மை எச்சம் குறித்து நிற்றலின், உம்மை இடைச்சொல்லே அன்றி எஞ்சாப் பொருள ஆகிய பொருட்பெயர்களும் இவ்விதி பெறுதல் அதிகாரப் புறனடையால் கொள்க. 7 |
விளக்கம் |
முற்றும்மை எச்சப்பொருட்கண் வரும் வழு, வழக்குப் பயிற்சி உண்மை காரணமாக அமைக்கப் படுகிறது. இவ்வுரை சேனாவரையர் நச்சினார்க்கினியர் என்ற இருவர் விளக்கமும் கொண்டுள்ளது. |
ஒத்த நூற்பாக்கள் |
| ‘முற்றிய உம்மைத் தொகைச்சொல் மருங்கின் எச்சக் கிளவி உரித்தும் ஆகும்.’ | தொல்.சொல். 285 |
| முழுதும் | நன்.426 |
எச்சவும்மைக்கண் சொல்லுமாறு
|
258. | எஞ்சுபொருட் கிளவி செஞ்சொல் ஆயின் பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல். | |
இஃது எச்ச உம்மைக்கண் சொல்லுதல் வகைமை கூறுகின்றது. | |