சாத்தன் வந்தான்- உம்மை அடாத சொற்றொடர். இதனை முன்னர்க் கூறிக் கொற்றனும் வந்தான் என்ற தொடரைப் பின்னர்க் கூறுக. ஈண்டு முன்பின் என்பன காலமுன் காலபின் என்பதனை அறிக. அடகு புலால் பாகு பாளிதமும் என்ற தொடரில் உம்மை அடாத சொற்கள் முன்னரும் உம்மை அடுத்த சொல் இறுதியும் வந்தமை காண்க. கொற்றனும் வந்தான் சாத்தன் வந்தான் எனின் இரண்டு தொடர்க்கண்ணும் பொருள் இயைபு ஏற்படாமை காண்க. உரை நச்சினார்க்கினியர் உரையே. (286) |