| நிலனொடும் நீரொடும் தீயொடும் வளியொடும் நான்கும் | |
எனவும், |
| நிலனொடு நீரொடு தீயொடு வளியொடு பொருந்தி | |
இவை நான்கும் தொகை பெற்றும் பெறாதும் வந்தன. ‘தொகை’ எனப் பொதுப்படக் கூறிய அதனானே, எண்ணுப் பெயரே அன்றி, அனைத்தும் எல்லாம் என்னும் தொடக்கத்தனவும் கொள்க. செவ்வெண் இடைச்சொல் அன்று ஆயினும், எண் ஆதலும் தொகை பெறுதலும் ஆகிய ஒப்புமையான் ஈண்டுக் கூறினார்; அஃது எண்ஆதல் புறனடையால் கொள்க. |
| ‘குன்றி கோபம் கொடிவிடு பவளம், ஒண்செங் காந்தள் ஒக்கும் நின்நிறம்’ | |
எனச்செவ்வெண் தொகை பெறாதும் வருமாலோ எனின், அது தொகுக்கும் வழித் தொகுத்தலான் தொக்கு நிற்கும் என்க. பிறவும் அன்ன.10 |
விளக்கம் |
பெயர்ச் செவ்வெண் உம்மைத் தொகையின் வேறானது. உம்மைத்தொகையான் இணைந்த சொற்களைத் தனித்தனிப் பிரித்தல் இயலாது. செவ்வெண்ணால் இணைந்தவற்றைப் பிரித்துப் பொருள் கொள்ளலாம். |
| சேர சோழ பாண்டியர்- உம்மைத்தொகை. சேரன் சோழன் பாண்டியன் மூவர்- செவ்வெண். | |
செய்யுளில் செவ்வெண்தொகை விகாரத்தால் தொக்கும் வரும். |