சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

412 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

ஒத்த நூற்பாக்கள்:

 
  ‘அவற்றின் வரூஉம் எண்ணின் இறுதியும்
பெயர்க்குஉரி மரபின் செவ்வெண் இறுதியும்
ஏயின் ஆகிய எண்ணின் இறுதியும்
யாவயின் வரினும் தொகைஇன்று இயலா.’

தொல்.சொல்.290

 
  உம்மை எண்ணும் எனஎன் எண்ணும்
தம்வயின் தொகுதி கடப்பாடு இலவே.’

287

 
  முழுதும்-

நன். 428

 
  ‘எண்வகை எட்டனுள் ஏசெவ்வெண் என்றாஎனா
நான்கும் தொகைபெறும் என்றுஎன ஒடுஉம்மை
நான்கும் தொகாமை நடக்கவும் பெறுமே
என்றுஎன ஒடுமூன்று எஞ்சிடத் தனவுமாம்.’

தொ.வி. 130


சிலவற்றுக்குச் சிறப்புவிதி
 

261. என்றும் எனவும் ஒடுவும் தோன்றி
ஒன்று வழி உடைய எண்ணினுள் பிரிந்தே.
 

இ-ள்: என்றும் எனவும் ஒடுவும் என்பன ஒருவழித்தோன்றி எண்ணினுள் பிறவழியும் சென்று ஒன்றும் இடம் உடைய என்றவாறு.
 

  வரலாறு: -
‘வினைபகை என்று இரண்டின் எச்சம்’

குறள். 674

எனவும்,
 
  ‘கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை’

தொல்.7

எனவும்,
 
  ‘பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்’

குறள். 675

எனவும்,