எனவும் வரும்.பிறவும் வினையொடு வருவன உளவேல் காண்க. உம்மையான், பெயரொடு வருதலே பெரும்பான்மை என்பதாம். ‘ஏற்பன’ என்றதனானே, முற்றும் பெயரெச்சமும்பற்றி வாரா எனவும், வினையெச்சத்தொடும் ஏற்பனவற்றொடு அல்லது வாரா எனவும். ஆண்டுத் தொகை பெறுதல் சிறுபான்மை எனவும் கொள்க. ‘சாத்தன் வந்தான் கொற்றன் வந்தான் வேடன் வந்தான் மூவரும் வந்தமையான் கலியாணம் பொலிந்தது’ எனச் செவ்வெண் தொகை பெற்று வந்ததால் எனின், அவை எழுவாயும் பயனிலையுமாய் அமைந்து மாறுதலின் எண்ணப்படாமையானும், மூவரும் என்பது சாத்தன் முதலாயினோர் தொகை ஆகலானும் பொருந்தாது என்க. |