சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

இடைச்சொல்இயல்-நூற்பா-12,13415

ஒத்த நூற்பாக்கள்:

  ‘வினையொடு நிலையினும் எண்ணுநிலை திரியா
நினையல் வேண்டும் அவற்றவற்று இயல்பே.’

தொல்.சொல். 293

  முழுதும்

நன்.430


 

‘மன்’ இடைச் சொல்

263. கழிவே ஆக்கம் ஒழியிசை அசைநிலை
எனநான்கு என்ப மன்னைச் சொல்லே.


 

இது மன் என்னும் இடைச்சொல் பெரும்பான்மை பொருள் படுமாறும்
சிறுபான்மை அசைநிலை ஆமாறும் கூறுகின்றது.

இ-ள்: கழிவு குறித்து நிற்பதும் ஆக்கம் குறித்து நிற்பதும் ஒழியிசைப்
பொருண்மை குறித்து நிற்பதும் அசை நிலையாய் நிற்பதும் என நான்கு வகையினை
உடைத்துஎன்று சொல்லுவர் ஆசிரியர், மன் என்னும் இடைச்சொல் என்றவாறு.
 

  வரலாறு: ‘சிறியகள் பெறினே எமக்குஈயும் மன்னே’

புறம். 235

என்புழி, மன் இனி அது கழிந்தது என்னும் பொருள் குறித்து நின்றது.

பண்டு காடுமன் என்புழி, மன் இன்று கயல் பிறழும் வயல் ஆயிற்று என ஆக்கம்
குறித்து நின்றது.

கூரியது ஒருவாள் மன், என்புழி, மன் திட்பமின்று ஆயினும் என எச்சமாய்
ஒழிந்த சொல் பொருண்மை குறித்து நின்றது.