|
| ‘அதுமன் கொண்கன் தேரே’ | |
என்புழி, மன் அசைநிலையாய் நின்றது. |
| ‘மன்னும் மாதர் பெருங்கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி’ | சிலப்-7-2 |
என மிகுதி குறித்தும், |
| ‘மன்னா உலகத்து மன்னிய புரைமே’ | கலி.54 |
என நிலைபேறு குறித்தும் வரும் என்பாரும் உளராலோ எனின், அவை வினைச்சொல்லாய் நிற்றலின் ஈண்டைக்கு எய்தா என்க. 13 |
விளக்கம் |
பொருள் நிலையையும் அசைநிலையையும் தனித்தனியே இடையே கலவாது கூறுதல் இவர் இயல்பாம். மிகுதிப் பொருளினும் நிலைபேற்றுப் பொருளினும் வரும் மன் என்பது வினைச்சொல்லே, இவ்விடைச்சொல் அன்று என்று கூறி நன்னூலாரை மறுத்துள்ளார்; தொல்காப்பியனார் கூறாத அசைநிலையையும் உடன்கூறி, நன்னூலார் கூறிய மிகுதி நிலைபேறு என்ற பொருள்களை மறுத்துள்ளார். |
ஒத்த நூற்பாக்கள்
|
| ‘கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவிஎன்று அம்மூன்று என்ப மன்னைச் சொல்லே.’ | தொல்.சொல்.252 |
|
| ‘காண்டகுமன் ஆக்கம் கழிவே ஒழியிசை.’ | நே.சொல்.53 |
|
| ‘மன்னே அசைநிலை ஒழியிசை ஆக்கம் கழிவு மிகுதி நிலைபேறு ஆகும்.’ | நன்.432 |
|
| ‘ஆக்கம் ஒழியிசை கழிவையும் தரும்மன்.’ | மு.வீ.ஒ.2 |