விளக்கம்    | 
|    |  உரை முழுதும் சேனாவரையர் உரைத்தனவே. | 253  | 
  விழைவுப் பொருள் தன்மைக்கே உரித்து எனவே, ஏனைய இரு பொருளும்  மூவிடங்களுக்கும் உரிய என்பதாம்.   | 
ஒத்த நூற்பாக்கள்    | 
|    |  ‘விழைவே காலம் ஒழியிசைக் கிளவிஎன்று அம்மூன்று என்ப தில்லைச் சொல்லே.’ | தொல்.சொல்.253  | 
|    |  ‘தில்லை பருவம் விழைவு, நயனில் ஒழியிசையும் நாட்டு.’ | நே. சொல்.53  | 
|    |  ‘விழைவே காலம் ஒழியிசை தில்லே.’ | நன்.431;  | 
 ‘கொன்’ இடைச்சொல்  
  | 
| 265. |  அச்சம் பயம்இலி காலம் பெருமை என்று அப்பால் நான்கே கொன்னைச் சொல்லே. |     | 
 இதுகொன் என்னும் இடைச்சொல் பொருள்படுமாறு கூறுகின்றது. இ-ள்: அச்சப் பொருள் குறிப்பதும் பயமின்மைப் பொருள் குறிப்பதும் காலப் பொருள் குறிப்பதும் பெருமைப் பொருள் குறிப்பதும் என்று கூறப்பட்ட அக்கூற்று நான்கேயாம் கொன் என்னும் இடைச்சொல் என்றவாறு.    | 
|    |  வரலாறு: ‘கொன்முனை இரவுஊர் போல’ | குறுந்.91  | 
 என்புழி அஞ்சி வாழும் ஊர் என அச்சமும்,   | 
|    |  ‘கொன்னே கழிந்தன்று இளமையும்’ | நாலடி.55  | 
|  என்புழிப் பயம் இன்றிக் கழிந்தது எனப் பயம்இன்மையும்.  |