சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

இடைச்சொல்இயல்-நூற்பா-15,16419

  ‘கொன்வரல் வாடை’
 

என்புழிக் காதலர் நீங்கிய காலம் அறிந்து வருதலை உடைய வாடை எனக்காலமும்,
 

  ‘கொன்ஊர் துஞ்சினும் யாம்துஞ்சலமே’

குறுந். 138

என்புழிப் பேரூர் துஞ்சினும் எனப் பெருமையும் குறித்து நின்றவாறு காண்க.
 

விளக்கம்
 

உரை சேனாவரையர் உரையே- (254) நன்னூலார் இவ்விடைச்சொல்லைக்
குறிப்பிடவில்லை.
 

ஒத்த நூற்பா
 

  முழுதும்

தொல்.சொல். 254,மு.வீ.ஒ.4

  ‘,., .......... ......... ...... ....கொன்
ஆண்டுஅறிகா லம்பெருமை அச்சமே- நீண்ட
பயனின்மை’

நே.சொல்.53


‘மற்று’ இடைச்சொல்
 

266. மற்றுஎன் கிளவி வினைமாற்று அசைநிலை.
 


இது மற்று என்பது பொருள்படுமாறும் அசைநிலை ஆமாறும் கூறுகின்றது.

இ-ள்: மற்று என்னும் இடைச்சொல் முன் சொல்கின்றது. ஒழிய இனி அது வேறு
என்னும் பொருண்மை குறித்தலும் அசைநிலை ஆதலும் உடைத்து என்றவாறு.
 

  வரலாறு: ‘இனி மற்றொன்று உரை’
 

எனத் தொழிலும்,
 

  ‘மற்று அறிவாம் நல்வினை யாம் இளையம்’

நாலடி. 19

எனக் காலமும்,