சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

420 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘மற்றும் கூடும் மனைமடி துயிலே’
 

என இடமும் பற்றி வரும்.
 

  ‘அதுமற்று அவலம் கொள்ளாது’

குறுந். 12

என்பது அசைநிலை.

  கட்டுரையிடையும் மற்றோ என அசைநிலையாய் வரும்.
 

  ‘ஊழின் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்’

குறள்.380

என்புழிப் பிறிது என்னும் பொருள்பட வந்துஎன்பாரும் உளராலோ எனின்,
வினைமாற்றோடு இதனிடை வேற்றுமை இன்மையின் பொருந்தாது என மறுக்க. 16
 

விளக்கம்
 

செய்திகள் பெரும்பாலன நச்சினார்க்கினியர் உரைத்தனவே (தொல்.சொல் 264.
நச்.)

வினைமாற்று என்பது முன் சொல்கின்றது ஒழிய இனி அது வேறு என்ற
பொருண்மைத்து ஆதலின், அதன் கண் பிறிது என்ற பொருளும் அடங்கும் என்ற
கருத்தான் நன்னூலார் பிறிது என்று தனிப்பட்ட வகையில் கூறியபொருளை இவர்
மறுத்தார்.
 

ஒத்த நூற்பா
 

  ‘மற்று என் கிளவி வினைமாற்று அசைநிலை
அப்பால் இரண்டென மொழிமனார் புலவர்.’

தொல்.சொல்.262


 
  ‘வினைமாற்று அசைநிலை பிறிது எனும் மற்றே.’

நன்-433


 
  ‘மற்றென் கிளவி வினைமாற்று அசைநிலை.’

மு.வீ.ஒ.16