சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

இடைச்சொல்இயல்-நூற்பா-17,18421

‘எற்று’ இடைச்சொல்
 

267. எற்றுஎன் கிளவி இறந்த பொருட்டே.
 

இஃது எற்று என்னும் இடைச்சொல் பொருள்படுமாறு கூறுகின்றது.

இ-ள்: எற்று என்னும் இடைச்சொல் ஒன்றன் இடத்தின் நின்றும் ஒன்று போயிற்று
என்னும் பொருளை உணர்த்துதலை உடைத்து என்றவாறு.
 

  ‘எற்றுஎன் உடம்பின் எழில் நலம்’
 
என்புழி என்நலம் இழந்தது என்கின்றது.
 
  ‘எற்றுஏற்றம் இல்லாருள் யான் ஏற்றம் இல்லாதேன்’
 
என்பதூஉம் இப்பொழுது துணிவு இல்லாதாருள் துணிவு இல்லாதேன் என்று துணிவு இறந்தது என்பதுபட நின்றது. 17
 

விளக்கம்
 

  உரை சேனாவரையர் உரையே.

(தொல்.சொல்.263)


ஒத்த நூற்பாக்கள்
 

  முழுதும்

தொல்.சொல். 263,மு.வீ.ஒ-11


‘மற்றையது’ பொருள்படுமாறு
 

268. மற்றையது என்பது சுட்டிய தற்குஇனம்.
 

இது மற்றையது என்பது பொருள்படுமாறு கூறுகின்றது.

இ-ள்: மற்றையது என்னும் பெயர்க்கு முதல்நிலையாய் வரும் மற்றை என்னும்
ஐகார ஈற்று இடைச்சொல் ஒருவன் முன்னர்க் கருதப்பட்ட பொருள் ஒழிய அதன்
இனப் பொருளைக் குறித்து நிற்கும் என்றவாறு.