சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-1489

இடம்பூணி- சகடத்தின் இடப்புறத்துப் பூட்டப்பட்ட காளை, பூட்டப்படுவதுபூணி;
அது
 

  ‘பூணி யின்றியும் பொறியின் இயங்கும்
மாண்வினை வையம்’
(பெருங்கதை- இலாவாண
8-177,178)

என்பதனானும் உணரப்படு. வலம்இடம், என்பனவே நேரிய சொற்கள், இடது, வலது
என்பன வழூஉச்சொற்களாம் என்க.

மேய்த்தற்றொழில் இடையன், பாகன் என்ற இருவர்க்கும் ஒக்குமேனும் மரபு பற்றி
அப்பெயர்கள் வரையறுக்கப்பட்டன.
 

சூறாவளி
 

நால்வகை ஓத்தினுள்ளும் கூறுதற்கு இடன் இன்றி எஞ்சி நின்ற நால்வகைச் சொல்
இலக்கணங்களை முன்னர் வைத்து வழுக்களைந்து சொற்களை அமைத்துக் கோடலை
அவற்றின் பின்னாக வைப்பின் அன்றே நால்வகை ஓத்தினோடு இவ்வோத்திற்கு
இயைபுடைமை விளங்கும். அங்ஙனம் வையாமல் மாறி வைத்தாமையான், முதல்
ஓத்துக்களோடு இயையாமை உணர்க.
 

அமைதி
 

‘தலைதடுமாற்றம் தந்து புணர்த்தல்’ தந்திர உத்தியாகும் என்ற மரபை நோக்கி
அமைதி காண்க. வழுக்களைந்து சொற்களை அமைத்துக் கோடலும் நால்வகை
ஓத்தினுள்ளும் கூறுதற்கு இடனின்றாகப் பொதுவியலில் இடம் பெற்றதும் காண்க.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘வினையின் தோன்றும் பாலறி கிளவியும்
பெயரின் தோன்றும் பாலறி கிளவியும்
மயங்கல் கூடா தம்மர பினவே’
தொல்.சொல்.11