சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

490 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘பாலே திணையே வினாலே பகர்மரபே
காலமே செப்பே கருதிடமே-போலும்
.........................................................................
பிறழ்வும் சிதைந்த உரை.’
நே.சொல்.6
  ‘திணையே பால் இடம் பொழுது வினா இறை
மரபுஆம் ஏழும் மயங்கின் ஆம் வழுவே.’
நன்.375
  ‘வழுவாம் உரிமை மயங்கிக் கெடின் அவை
இடம்பால் திணைபொழுது இறைவினா மரபுஏழே’
தொ.வி.127
   
 

ஐயப்பொருள்மேல் சொல் நிகழ்த்துமாறு
 

296. திணைமயக்கு உற்ற ஐயப் பொருளையும்
பால்மயக்கு உற்ற ஐயப் பொருளையும்
உருவே பன்மை அஃறிணைப் பிரிப்பின்
அறைதலும் துணிந்துழி அன்மைஅல் லாமை
மறுப்பதன் மருங்கினும் மற்றதன் இடத்தும்
திறப்படச் சுட்டலும் செவ்வியது என்ப.

 

இஃது உயர்திணையாக அஃறிணையாக- ஆண்பாலாக பெண்பாலாக- ஒன்றாக-
பலவாக- யாதானும் ஒன்று ஆகற் பாலதனை அதற்கு உரிய சிறப்புச் சொல்லால்
சொல்லாது இருதிறத்தும் சேறற்கு உரிய பொதுச்சொல்லால் சொல்லுதல் வழுவாம்
ஆயினும், ஐயப்பொருள்மேல் சொல் நிகழ்த்துமாறு உணர்த்திய முகத்தான் அமைக
எனத் திணைவழு அமைத்தலும் பால்வழு அமைத்தலும், துணிந்தவழி அன்மைக் கிளவி
ஒரு பொருள் ஒருபொருள் அன்றாந்தன்மையைச் சுட்டிநிற்கும் திறனும் கூறுகின்றது.

இ-ள்: திணை துணியாத ஐயப்பொருளையும், திணை துணிந்து பால் துணியாத
ஐயப்பொருளையும் உருவும்- பன்மையும்- ஒருமையும் பன்மையுமாகப் பிரிக்கப்படும்
அஃறிணைப் பொதுவும்- ஆகிய ஐயப்புலப் பொதுச்சொற்களால் கூறலும், திணைபால்