இது, மேல் அவ்வாற்றான் பகுத்தசொல் இவ்வாற்றான் இத்துணை ஆம் என்கின்றது. இ-ள்: மேல் கூறப்பட்ட சொல்லே இயற்சொல்லும் திரிசொல்லும் ஆகிய இரண்டன் தன்மையானே கூறுபடும் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் என இரண்டாம்; இடைச்சொல்லும் உரிச்சொல்லும் ஆகிய இரண்டும் கூட, நான்கு வகைத்துமாம்; திசைச்சொல்லும் ஆரியச்சொல்லும் கூடாத இடத்து என்றவாறு. இங்ஙனம் கூறிய அதனால் போந்தது, பெயர்இயற்சொல் பெயர்த்திரிசொல்- வினைஇயற்சொல்- வினைத்திரிசொல்- இடைஇயற்சொல்- இடைத்திரிசொல்- உரிஇயற்சொல்- உரித்திரிசொல் என எண்வகைத்தாம் தமிழ் நாட்டிற்கு உரியசொல் என்பதாம். அற்றேல் அடுத்து நான்குமாம், என்னாது, ஒன்றாக ஓத அமையும் பிறஎனின், பெயர்ச்சொல் பொருளை விளக்குதலானும் வினைச்சொல் பொருளது புடை பெயர்ச்சியை விளக்குதலானும் அவற்றை முன்ஓதி, இடைச்சொல் அவ்விரண்டற்கும் விகுதி- வேற்றுமை- உவமை- சாரியை- உருபுகள் ஆகியும் சில பெயர்வினைகள் ஆகியும் வருதலானும், தெரிநிலை- தேற்றம் முதலிய பொருண்மை |