மேல் என்றது 160 ஆம் நூற்பாவினை. இயற்சொல் திரிசொல் என்பனவற்றைப் பெயர் வினை இடை உரி என்ற நான்கனொடும் தனித்தனியே கூட்ட சொல் வகை எட்டாகும். உரிஇயற்சொல் இன்று என்பது சங்கரநமசிவாயர் சிவஞான முனிவர் ஆகியோர் கருத்தாகும். ‘அல்லதூஉம், இவை பெயர்வினைபோல.... ... ஆயிற்று என்பது நன்-269 ஆம் நூற்பா உரையுள் மயிலைநாதர் உரைத்தனவேயாம். திசைச்சொல்லும் வடசொல்லும் அருகியே தமிழ் கலந்து வருவனவாதலின், அவற்றிற்கு இயற்சொல் சொற்கள்போல விரிவான இலக்கணம் கூறப்படவில்லை என்பது. |