ஒன்றுகொல்லோ பலகொல்லோசெய் புக்கன எனவும், ஒன்றுகொல்லோ பலகொல்லோ செய் புக்க பெற்றள் எனவும், ஒருவன்கொல்லோ பலர்கொல்லோ கறவை உய்த்த கள்வர் எனவும், ஒருத்திகொல்லோ பலர்கொல்லோ இக்குருக்கத்தி நீழல் வண்டல் அயர்ந்தார் எனவும், திணைஐயத்துக்கண்ணும் பால்ஐயத்துக்கண்ணும் உருவு முதலாயின ஐயப்புலப் பொதுச் சொற்களாய் வந்தவாறு காண்க. மகன் என்று துணிந்தவழித் துணியும் முன் ஒருகால் குற்றிகொல்லோ என்றும் ஐயம் சென்றமையின் குற்றி அன்று என அதனை மறுத்து மகன் என்றும், குற்றி என்று துணிந்தவழித் துணியும் முன் ஒருகால் மகன்கொல்லோ என்றும் ஐயம் சென்றமையின் மகள் அல்லன் என அதனைமறுத்துக் குற்றி என்றும், ஆண்மகன் என்று துணிந்தவழித் துணியும்முன் ஒரு கால் பெண்டாட்டி கொல்லோ என்றும் ஐயம் சென்றமையின் பெண்டாட்டி அல்லள் என அதனைமறுத்து ஆண் மகன் என்றும், பெண்டாட்டி என்று துணிந்தவழித் துணியும் முன் ஒருகால் ஆண்மகன் கொல்லோ என்றும் ஐயம் சென்றமையின் ஆண்மகன் அல்லன் என அதனை மறுத்துப் பெண்டாட்டி என்றும், ஒன்று என்று துணிந்தவழித் துணியும் முன் ஒருகால் பலகொல்லோ என்றும் ஐயம் சென்றமையின் பல அல்ல என அதனை மறுத்து ஒன்று என்றும், |